தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் நிலவும் கடும் வெயில் காரணமாக, மலையேற்றம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் குரங்கணி காட்டுப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட, சென்னை, ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். அவர்களில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 23 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடும் கட்டுப்பாடுகளுடன் மலையேற்றம் செல்ல அவ்வப்போது அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை தடை நீடிக்கும் எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post