ஆட்டோ டிரைவர் ஒருவர் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை தருவதற்காக , தனது ஆட்டோவில் நவீன வசதிகளை ஏற்படுத்தியுள்ளார், அது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு
மராட்டிய மாநிலத்தின் மும்பை நகரில் வசித்து வருபவர் சத்யவான் கீதே,ஆட்டோ ஒட்டுநர் ஆன அவர் தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணாளிகளுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக நவீன வசதிகளை ஆட்டோவில் ஏற்படுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் அந்த ஆட்டோவில் மொபைல் போன் சார்ஜ் செய்வதற்கான வசதி, டெஸ்க்டாப் கணினி வசதி, சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்கான வாஷ் பேஷன் தொட்டி மற்றும் சில்லென்ற குளிர் காற்று தரும் மின்விசிறி உள்ளிட்டவற்றை அமைத்து உள்ளார்.
இது மட்டுமல்லாமல் உடற்பயிற்சிக்கு தேவையான ஆலோசனைகள் கிடைக்கும் விதத்தில் கணினி ஒன்றையும் பொருத்தியுள்ளார் . வீட்டில் இருப்பது போன்ற வசதிகளை செய்துள்ள சத்தியாவன் கீதே இது குறித்து ஆட்டோவின் பின்புறம் , விமானத்தில் பயணிக்கும் அனுபவம் பெற்றிடுங்கள் என்றும் எழுதியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் மூத்த குடிமக்கள் தனது ஆட்டோவில் 1 கி.மீ. வரை பயணம் செய்வதற்கு அவர் கட்டணம் எதுவும் வசுலிப்பதில்லை.
பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த நவீன வசதிகளை செய்து உள்ளதாக சத்தியவான் கூறுகிறார்.பயணிகளுக்கு புதுவித அனுபவமாக இவரது ஆட்டோ இருப்பதால் பொதுமக்கள் பலரும் இவரது ஆட்டோவில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post