தீபாவளி பண்டிகையை, தங்களது சொந்த ஊரில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகைக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை உள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட ஆயிரக்கணக்கானோர் ஆயத்தமாகி உள்ளனர். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது.
பொதுமக்களும் சிரமம் இன்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாகி வருகின்றனர். நேற்று இரவு முதலே தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
கோயம்பேடு பேருந்து நிலையம் தவிர, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. 6 பேருந்து நிலையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ள தற்கால பேருந்து நிலையத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால், சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.
Discussion about this post