தஞ்சையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான வழக்கறிஞர்கள் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினர் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் தஞ்சையில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தானாகவே முன்வந்து அதிமுகவில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து தஞ்சையில் வழக்கறிஞர்கள் பலர் அதிமுக தஞ்சை கிழவாசல் பகுதி செயலாளர் ரமேஷ் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் முன்னிலையில் இணைந்தனர். அதிமுக அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததால் அதிமுகவில் இணைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post