அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் குறித்து காவல் துறையினருக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
வாக்குசாவடி பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை கையாள்வது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் அலுவலர்கள் புண்ணியக்கோட்டி, கீதாராணி தலைமையில் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அப்போது, காவல் துறையினருக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்றனர்.
Discussion about this post