நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள கூடிய ”விவிபேட்” கருவியை இயக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியில் விவிபேட் கருவியை எப்படி இயக்குவது குறித்த விளக்கி காண்பிக்கபட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு அரசு அதிகாரிகளும், வாக்கு மையங்களில் பணியாற்ற கூடிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அப்போது ஒருவர் வாக்களித்தால் அந்த வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை 7 நொடிகள் திரையில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும், கருவியை அனைத்து அதிகாரிகளும் முறைப்படி சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆட்சியர் சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டார். இதே போன்று நெல்லையில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் ஒப்புகைசீட்டு எந்திரம் பயன்படுத்தப்படுவது குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் வட்டாட்சியர்கள் , துணை வட்டாட்சியர்கள் , வருவாய்த்துறை அலுவலர்கள் , உள்ளாட்சிதுறை அலுவலர்கள் , மாவட்ட ஊரக முகமைத் திட்ட அலுவக ஊழியர்கள் என 200 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
Discussion about this post