அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் நவீன முறை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சோழமாதேவி வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் எனப் பலர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர். சொட்டுநீர் பாசனம், பூச்சி தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு காணொலிக் காட்சி மூலம் விளக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் வேளாண் அறிவியல் மையத்தில் அமைந்துள்ள விவசாயப் பண்ணையில் களப்பணி மேற்கொண்டனர். வேளாண் துறையின் பயிற்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகத் தெரிவித்த விவசாயிகள், குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்கும் வகையில் சாகுபடி செய்ய பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறினர்.
Discussion about this post