அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத குளிர் காரணமாக, தண்டவாளங்களில் நெருப்பு வைத்து ரயில்களை இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. துருவ சுழல் என கூறப்படும் வரலாறு காணாத கடுங்குளிரை எதிர்கொள்ள இருப்பதால், அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்கியுள்ளன. விஸ்கான்சின், மிச்சிகன், அலபாமா மற்றும் மிஸிசிப்பி ஆகிய மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சிகாகோவில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளது.
ஏரிகள் முழுவதும் உறைந்து காணப்படுகிறது. விமான சேவைகள் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தண்டவாளங்களுக்கு நெருப்பு வைத்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Discussion about this post