திருத்தணியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தநிலையில் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் மின்சார ரயில்களுக்கான மின்கம்பி அறுந்து விழுந்தது. சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனையடுத்து அரக்கோணத்திலிருந்து விரைந்து சென்ற ஊழியர்கள், அறுந்து கிடந்த மின் கம்பியை சரி செய்தனர். இதனால் சென்னை-திருப்பதி மார்க்கத்தில் 2 மணிநேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
Discussion about this post