திண்டுக்கல்லில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலைகளை மறைத்து திமுகவினர் பேரணி நடத்தியதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
திண்டுக்கல்லில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக துணை பொதுச் செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, முக்கிய சாலைகள் வழியாக தி.மு.க.வினர் பேரணியாக சென்றனர். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், திமுகவினர் பேரணி நடத்தினர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பேருந்துகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும். இருசக்கர வாகன ஓட்டிகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர்.
திமுகவினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Discussion about this post