மதுரை மாநகரில் 30ம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
மதுரையில், 30ம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, 30ம் தேதி லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10:30 மணி வரை மதுரை மாநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில், வாகனங்கள் செல்லவும் அனுமதி இல்லை எனவும், மாற்று வழி விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post