மணாலி-லே நெடுஞ்சாலையில் படர்ந்துள்ள பனியால் போக்குவரத்து பாதிப்பு

மணாலி – லே நெடுஞ்சாலையில் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணியில் எல்லையோர சாலை பராமரிப்பு அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

ஜம்மு காஷ்மீரின் லே மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தின் மனாலி ஆகிய முக்கிய நகரங்களை மணாலி – லே நெடுஞ்சாலை இணைக்கிறது. கடந்த சில நாட்களாக பொழிந்துவரும் பனி காரணமாக இந்த சாலை முழுவதும் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பனியை அகற்றும் பணியில் எல்லையோர சாலை பராமரிப்பு அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்றோடு பனி முழுவதையும் அகற்ற திட்டமிட்டிருந்த நிலையில், கடும் பனி பொழிவு காரணமாக இதில் தோய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், இன்றைய தினமும் பனியை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Exit mobile version