கோடை விடுமுறையை ஒட்டி, மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டு, திருமலை நாயக்கர் மஹால் கட்டப்பட்டது. இந்தோ – சரசனிக் பாணியில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மஹால், 58 அடி உயரத்தில் 48 தூண்களோடு பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. மேற்கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் வண்ண, ஓவியங்களாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த அரண்மனையில் 1981 ஆம் ஆண்டு முதல் மாலை 6.45 மணியளவில் ஆங்கிலத்திலும், இரவு 8 மணியளவில் தமிழிலும் ஒலி- ஒளி அமைப்பில் அரண்மனை குறித்த தகவல்களை கூறுகின்றனர். திருமலை நாயக்கர் அரண்மனைக்கு தினந்தோறும் சராசரியாக ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
Discussion about this post