கன்னியாகுமரியில் குவியும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்

கன்னியா குமரியில் படகு சவாரி செய்வதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்க நாடு முழுவதில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம். அதேபோல் அங்கு படகு சவாரியும் புகழ்பெற்றதாகும். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இதனால் படகு சவாரிக்கான டிக்கெட் வழங்கும் இடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றனர். எப்படியெனும் படகுசவாரி சென்றே ஆக வேண்டும் என நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள், கூடுதல் படகுகளை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version