குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் செல்கின்றனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூலை – ஆகஸ்டு மாதங்களில் சீசன் களைகட்டும். குற்றாலம், செங்கோட்டையை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று மாலை பேரருவியிலும் ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இன்று காலை தண்ணீரின்அளவு குறைந்ததால், பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.
Discussion about this post