சுற்றுலாத் தலங்களை அக்.15 முதல் திறக்க அனுமதி – தளர்வுகளை அறிவித்த புதுச்சேரி அரசு

சுற்றுலாத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை வரும் அக். 15 முதல் திறந்துகொள்ளலாம் என்று அனுமதி அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அடிவிக்கப்பட்டிருந்த நிலையில், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. அந்தவகையில், அக்டோபர் மாதத்திற்கான தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் அனைத்துக் கடைகள் மற்றும் தனியார் அலுவலங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவங்களில் இரவு 9 மணி வரை அமர்ந்து சாப்பிடவும், 10 மணிவரை பார்சல் விநியோகம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுபானக்கடைகள், மற்றும் அமர்ந்து சாப்பிடும் மதுபானக்கூடங்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கவும், கடற்கரைகள், சாலையில் இரவு 9 மணிவரை நடைபயிற்சி செய்ய அனுமதி அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 5ம் தேதிமுதல் வகுப்புகள் தொடங்கும் என்றும், மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 12ம் தேதிமுதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்த நீச்சல் குளம் மற்றும் திரையரங்குகள் அக். 15ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொழுதுபோக்குப் பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் ஆகியவை அக்டோபர் 15 முதல் திறக்க அனுமதி அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version