2018ஆம் ஆண்டில் அதிகமாக google செய்யப்பட்ட மருத்துவ கேள்விகளின் பட்டியலை தெரிந்துகொள்ள ஒரு ஆய்வினை MedicareHealthPlans செய்திருக்கிறது.இந்த ஆய்வானது அதிகம் google செய்த மருத்துவ கேள்விகளின் அடிப்படையில் நடந்துள்ளது.
இந்த உலகமானது கணினி மயமாக மாறிகொண்டிருக்கும் நிலையில் நாம் அனைவரும் மிகவும் பயன்படுத்துவது GOOGLE என்பதில் மாற்றமே இல்லை .நம் மனதில் எந்த ஒரு கேள்வி எழுந்தாலும், அதற்கான விடையை நாம் யோசிப்பதை விட அதிகம் GOOGLE-ளிடமே கேட்கிறோம்.முக்கியமாக நமது உடல்நிலை குறித்தும் மருத்துவம் சம்மந்தப்பட்ட கேள்விகளும் அதிகமாக கேட்கிறோம்.அதில் 2018 ஆம் ஆண்டில் அதிகம் google-ளிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து கீழே காண்போம்.
1.cancer
இந்தியாவில் மிகவும் google search செய்த வார்த்தைகளில் முக்கியமானது cancer தான். தற்போது cancer நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டிருக்கும் நிலையில், அதன் அறிகுறிகளை அறிந்து அதிலிருந்து தற்காத்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
2.Blood pressure
மற்றொரு அதிமாக பயன்படுத்தும் வார்த்தை ஆனது blood pressure தான். இயந்திரம் போல் மக்கள் சுழன்று கொண்டிருக்கும் அழுத்தமே, இரத்த அழுத்தத்திற்கான காரணம் ஆகும்.
3.Diabetes
சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த காரணத்தால் தான், அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளின் பட்டியலில் diabetes இடம் பெற்றுள்ளது.
4.Insomnia
தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,மனிதனின் தூக்கமும் குறைந்தே கொண்டே இருக்கிறது.நாம் உண்ணும் உணவு, நாம் பயன்படுத்தும் செல்போன் அனைத்தும் நமது தூக்கமின்மைக்கு ஒரு காரணமாக விளங்குகிறது.சமீப தரவுகளின் படி 93 சதவீத இந்தியர்கள் 8 மணி நேரத்திற்கு குறைவாகவே உறங்குகின்றனர்.அவர்கள் இதைப்பற்றி search செய்யாமல் உறங்கி இருந்தாலே இப்பட்டியலில் இடம் பெற்றிருக்க மாட்டார்கள்.
5.Dengue
சில ஆண்டுகளாக டெங்குவின் தாக்குதல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் தான் மிகவும் பயன்படுத்தும் வார்த்தைகளில் டெங்கு இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு, கிட்டதிட்ட 10,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்படுள்ளது.
இதனை தொடர்ந்து,2018 ஆம் ஆண்டில் அதிகமாக google search செய்த வார்த்தைகளின் பட்டியலில் Diarrhoea,depression ,HIV,AIDS ,Constipation ,malaria,chikungunya ஆகிய வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன.
Discussion about this post