மதுரையில் திருமலை நாயக்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்ப உற்சவ விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் தெப்பதிருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நாளை காலை 10.30 மணிக்கு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்து, தெப்பத்தில் 2 முறை வலம் வருகிறார். இதனையொட்டி, மதுரை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதனால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 500க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Discussion about this post