பழனியில் நாளை தைப்பூசத் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், கடந்த 2-ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று மாலை திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெற உள்ளது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை நான்கு ரத வீதிகளில் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம், குடிநீர் வசதி, மொபைல் கழிப்பறை வசதி, மொபைல் மருத்துவ வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மேலே சென்று, படிப்பாதை வழியாக கீழே இறங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post