ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் 58 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
“வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னவிட்டு இன்னும் போகல” என்று படையப்பா திரைப்படத்தில் ரஜினியைப் பார்த்து ரம்யாகிருஷ்ணன் பேசும் வசனம் எந்த ஹாலிவுட் நடிகருக்குப் பொருந்தும் எனக் கேட்டால்… கண்ணை மூடிக்கொண்டு அது டாம் க்ரூஸ் என சொல்லலாம். அந்த அளவுக்கு என்றும் இளமையுடன் ஆக் ஷனில் தூள் கிளப்புபவர் டாம் க்ரூஸ்.
தாமஸ் க்ரூஸ் மெபொதர் என்று இயற்பெயருடைய டாம் க்ரூஸ், 1962 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள சிராக்யூஸில் பிறந்தார். டாம் க்ரூஸுக்கு 12 வயது இருக்கும்போது அவரின் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டதால் தந்தையுடன் இருந்த டாம், வறுமையில் வாடினார்.
நியூயார் நகரை நோக்கி தன்னுடைய 18 வது வயதில் பயணப்பட்ட டாம் க்ரூஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் வாய்ப்பு தேடினார். அதன்பிறகு ” எண்ட்லஸ் லவ்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தன் திரைவாழ்க்கையைத் துவங்கினார்.
திரைத்துரைக்கு வருவதற்கு முன்பு மிகவும் கஷ்டப்பட்ட டாம் க்ரூஸ் நடிக்க ஆரம்பித்தபிறகு தோல்விகளை சந்திக்கவே இல்லை. 1988 ஆம் ஆண்டு வெளியான ரெயின்மேன் திரைப்படம் 25 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 355 மில்லியன் வசூல் செய்து டாம் க்ரூஸை வசூம் மன்னனாக்கியது.
டாம் க்ரூஸை அதிரடி ஆக்ட்ஷன் ஹீரோவாகவும் ஸ்டைல் மன்னனாகவும் மாற்றியது மிஷன் இம்பாசிபிள் திரைப்படம்தான். மிஷன் இம்பாசிபிள் முதல் திரைப்படமே 80 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 450 மில்லியனுக்கும் மேல் வசூல் செய்தது. இதுவரை மிஷன் இம்பாசிபிள் திரைப்படங்கள் 6 பாகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் படத்திம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டாம் க்ரூஸும் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக சாகசங்களை செய்துகொண்டே இருக்கிறார்.
58 வது வயதில் அடியெடுத்து வைக்கும் டாம் க்ரூஸ் மூன்று முறை திருமணமாகி விவகரத்தானவர். இருப்பினும் முதல் திருமணத்திற்குத் தயாராகும் புதுமாப்பிள்ளைப் போல இளமை துடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஏழுமுறை கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு மூன்று முறை வென்றிருக்கும் இவர், மூன்று முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post