நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது முடிவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை செய்ய அக்டோபர் மாதம் இறுதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 16 லட்சத்து 21 ஆயிரத்து 838 பேர் விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்று களஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் நடந்து வந்தது. தற்போது இந்த பணிகள் முடிந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. அதன்படி காலை 11 மணிக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்
Discussion about this post