தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 45 மையங்களில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் வேலூர் நீங்கலாக 38 மக்களவை தொகுதிகளிலும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட உள்ளன. 45 மையங்களில் நடைபெறும் இந்த வாக்கு எண்ணிக்கையின்போது சுமார் 1.12 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடயிருக்கின்றனர். தொகுதிகளுக்கு ஏற்றவாறு வாக்கு எண்ணிக்கை, சுற்றுகளின் எண்ணிக்கை வேறுபடும் என்பதுபோன்ற பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் கொண்டுச் செல்லக்கூடாது என்றும், அதேசமயம் பென்சில், பேனா மற்றும் பேப்பர் கொண்டுச்செல்லலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தேர்தல் முடிவு அறிவிப்பின்போது வெற்றி வாக்கு வித்தியாசம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகளை விட குறைவாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகள் தேர்தல் அலுவலரின் மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post