தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டினை தாக்கல் செய்கிறார்.
2020ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கடந்த மாதம் 6ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், 2020-2021ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் உள்ளிட்ட, முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குடிமராமத்து பணிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post