எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்கும் மைக்ரோசாட் -ஆர் மற்றும் மாணவர்கள் உருவாக்கியுள்ள கலாம் சாட் என்ற இரு செயற்கைகோள்கள் இன்றிரவு விண்ணில் செலுத்தப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தாவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள்கள் செலுத்தப்பட உள்ளன. இதற்கான கவுண்டவுன் நேற்றிரவு தொடங்கியது. மைக்ரோசாட் – ஆர் இமேஜிங் செயற்கைகோள் புவி அமைப்பு மற்றும் நாட்டின் எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும் வகையிலும், கலாம் சாட் ரேடியோ சேவையை அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பி.எஸ்.எல்.வி சி 44 ராக்கெட் செயற்கைகோள்களை விண்ணில் சுமந்து செல்கிறது. இஸ்ரோ இதுவரை 45 பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ள நிலையில் முதன்முறையாக செயற்கைகோள்களின் சுற்று வட்டப்பாதையை அதிகரிக்கும் விதமாக புதிய தொழில்நுட்பம் இந்த ராக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post