உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கு போட்டியிட கடத்த 9 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 மனுக்கள் தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் உள்ளிட்ட ஏராளமானோர் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் நாளை பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற டிசம்பர் 19 கடைசி நாளாகும்.
Discussion about this post