சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 208 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 904-ஆக விற்பனையாகிறது.
நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 629 ரூபாய்க்கும், சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 32 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 238 ரூபாய்க்கும், சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 904 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து 71 ரூபாய் 60 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Discussion about this post