டெல்லியில் ராஜஸ்தானை சேர்ந்த லாரி உரிமையாளருக்கு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 1 லட்சத்து 41 ஆயிரத்து 700 ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் ராஜஸ்தானை சேர்ந்த பகவான் ராம் என்பவருக்கு சொந்தமான லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடையை ஏற்றி சென்றது, உரிய அனுமதி பெறாதது போன்றவை கண்டறியப்பட்டது. இதையடுத்து, பகவான் ராமுக்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த தொகையை நீதிமன்றத்தில் செலுத்திய பகவான் ராம், லாரியை மீட்டுச் சென்றார்.
Discussion about this post