மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கன அடியாகக் குறைந்ததையடுத்து, 16 கண் உபரிநீர் போக்கி வழியே வெளியேற்றுபட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர்அணைக்கு நீர்வரத்து தொடர்ந்த அதிகரித்து வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.தற்போது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் 16 கண் உபரிநீர் போக்கி வழியே வெளியேற்றப்பட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டது.
Discussion about this post