விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக்கோவிலுக்கு, சாமி தரிசனம் செய்து விட்டு காட்டாற்று வெள்ளத்தால் திரும்ப முடியாமல் தவித்த பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், தரை மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் மட்டும் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில், நேற்று சனி மஹாபிரதோஷத்தை ஒட்டி, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது திடீரென மழை பெய்து, மாங்கனி உடை, சங்கிலிப் பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 50 பேர் திரும்ப முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் போராடி, பக்தர்களை பத்திரமாக மீட்டனர்.
Discussion about this post