எல்லை தாண்டிய தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்துவது மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட செயல்களில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டு வருகிறது. அதனடிப்படையில், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய எல்லையில் நுழைந்து ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக உறுதியான மற்றும் மீறமுடியாத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனை குறிப்பிட்டு பேசிய அமெரிக்க வெளியுறுவுத் துறை செயலாளர் மைக் பாம்ப்போ, தீவிரவாதிகளை வளர்ப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக, அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்ட மைக் பாம்ப்போ, தீவிரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் பாகிஸ்தான் அதிக அக்கறை செலுத்தவேண்டும் என்று கூறினர்.
Discussion about this post