ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸுக்கு, 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயஸ், தனது மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட் பயஸூக்கு பரோல் வழங்க சிறைத்துறை ஆட்சேபனை வழங்காததையடுத்து, அவருக்கு நீதிபதிகள் பரோல் வழங்கினர். நிபந்தனையை பின்பற்றி நடக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Discussion about this post