இளம்பெண்ணின் டிக்டாக் கணக்கினை நீக்கியதற்காக, அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளது டிக்டாக் நிறுவனம், அந்த பெண் யார்…? எதனால் அவரின் டிக்டாக் கணக்கானது நீக்கப்பட்டது என்பதைப் பற்றி விளக்குகிறது, இந்த சிறப்பு தொகுப்பு..
அமெரிக்காவை சேர்ந்த 17 வயதுள்ள பெரோசா என்ற இளம்பெண் ஒருவர், தனது டிக்டாக் கணக்கில் அழகு குறிப்பு மற்றும் பொதுநலன் குறித்த வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றார், இந்நிலையில் சமீபத்தில் அவர் சீனா குறித்த ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார், இந்த வீடியோ பதிவிட்ட சிலமணி நேரங்களிலே இவரது வீடியோ பல லட்சம் பேரால் பகிரப்பட்டு , அதிக லைக்குகளை அள்ளியது.
அந்த வீடியோவில் அவர் ‘‘சீனாவில் சிறுபான்மையினர்களாக உள்ள உய்குர் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்கள், அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள், அதுமட்டுமல்லாமல் பல்வேறு சித்ரவதைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள், எனவே இதுகுறித்த விழிப்புணர்வு அவசியம், என பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ பார்வையாளர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வந்த நிலையில் திடிரென பெரோசாவின் டிக்டாக் கணக்கானது திடீரென நீக்கப்பட்டது.
இவரின் டிக்டாக் கணக்கு நீக்கப்பட்டதை தொடர்ந்து டிக்டாக் நிறுவனத்திற்கு எதிராக பல சர்ச்சைகள் எழும்பியது, பலர் டிக்டாக் நிறுவனத்துக்கு எதிராக தங்களது கண்டனங்களை எழுப்பினர்.
பல்வேறு கண்டனங்கள் எழும்பியதை தொடர்ந்து பெரோசா அசிசின் கணக்கு நீக்கப்பட்டதற்கு ‘டிக்டாக்’ நிறுவனம் மன்னிப்பு கேட்டது, மேலும் அவரது கணக்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது டிக்டாக் நிறுவனம். இதுகுறித்து டிக்டாக் நிறுவனம் கூறுகையில், பெரோசா முஸ்லிம்களை பற்றி கூறியதற்காக அவரது கணக்கு நீக்கப்படவில்லை, ‘டிக்டாக்’கின் விதிகளை மீறும் வகையில் பின்லேடன் பற்றி வீடியோ வெளியிட்டதற்காகதான் அவரது கணக்கு நீக்கம் செய்யப்பட்டது என ‘டிக்டாக்’ நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.
Discussion about this post