இந்து வேத திருமண முறையை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு பலதரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இஸ்லாமிய திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு, பேசும் சுமார் 1 நிமிட 40 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பேசிய அந்த வீடியோ, தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், இந்து திருமண முறையை கடுமையாக விமர்சித்து பேசுகிறார் மு.க. ஸ்டாலின். இஸ்லாமியர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு, இவ்வாறு விமர்சித்து பேசினால், அவர்கள் தனக்கு வாக்களித்து விடுவார்கள் என்பதே ஸ்டாலினின் எண்ணம். பல மதத்தினரும் சகிப்புத் தன்மையுடன் வாழும் தமிழகத்தில், ஒவ்வொரு மதத்தினரும், பிறரின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருகின்றனர். இந்த அடிப்படைக் கூட தெரியாமல், வாக்கு கிடைக்கும் என்ற அடிப்படையில் மு.க.ஸ்டாலின் பேசியது, அவரது தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்புகிறது. இதற்கு இந்து மத அமைப்புகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன், ஸ்டாலினின் இந்த பேச்சு தேவையற்றது என்றும் தமிழகம் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, ஸ்டாலின் மட்டும் பின்னோக்கி செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Discussion about this post