நாடு முழுவதும் செயல்திறன் குறைந்து காணப்படும் ஏறக்குறைய 1200 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 3 ஆயிரத்து 972 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியாற்றி வரும் நிலையில் செயல்பாடு குறைந்த ஆயிரத்து 181 ஐ.பி.எஸ் அதிகாரிகளின் குறித்து கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது. உயிரிழப்பு மற்றும் ஓய்வுக்கால பணிகள் சட்டத்தின்கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்டத்தின்படி மக்களின் நலன்கருதி, மாநில அரசிடம் ஆலோசனை மேற்கொண்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மூன்று மாத கால அவகாசம் கொடுத்து கட்டாய ஓய்வு பெற அறிவுறுத்தலாம்.
இந்த ஆயிரத்து 181 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 10 பேரை முன்கூட்டியே கட்டாய ஓய்வுபெற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான மத்திய அரசின் இந்த ஆய்வு தொடர்ந்து வரும்நிலையில், நடவடிக்கை மேற்கொள்ள இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.
Discussion about this post