டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த சித்தாண்டியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
நடைபெற்று முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைக்கேடுகள் நடைபெற்றது தெரியவந்ததை அடுத்து நாளுக்கு நாள் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில், டி.என்.பி.எஸ்.சி முறைக்கேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த சித்தாண்டியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
சிவகங்கை கண்ணனூரைச் சேர்ந்த முதல்நிலை காவலரான சித்தாண்டி தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் காலையில் சித்தாண்டி மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், இராமநாதபுரம் சாலையில் அமைந்துள்ள தனது தோட்டத்தில், தலைமைறைவாக இருந்த சித்தாண்டி சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள சித்தாண்டிக்குக்கு குரூப்-4 , குரூப்-2ஏ தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. சித்தாண்டி தனது குடும்பத்தார்கள் 40 பேருக்கு இது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு வேலை வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட சித்தாண்டியை சிபிசிஐடி காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
Discussion about this post