தேர்வில் நிகழும் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு புதிய நடைமுறைகளை கொண்டு வருவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்வு நடைமுறைகள் நிறைவடைந்த பின் தேர்ச்சி பெற்றவர்களின் அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணைத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை கட்டணம் செலுத்தி இணையம் மூலம் உடனடியாக பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், கலந்தாய்வு நடக்கும் நாட்களின் முடிவில், நிரப்பப்பட்ட மற்றும் காலி இடங்கள் குறித்து இணையத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வர்கள் இனி இணையம் மூலம் விண்ணப்பிக்கும் போது, விருப்ப மையமாக 3 மாவட்டங்களை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் கட்டாயம் என்றும் , தேர்வு எழுதும் போது விரல் ரேகை மூலம் உண்மைதன்மை சரிபார்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் முறைகேடுகள் இருப்பின் முன்கூட்டியே அறிந்து தடுக்கும் விதமாக உயர் தொழில்நுட்பம் மூலம் தீர்வு கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post