டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி, 2-வது முறையாக கோப்பையை வென்று, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அசத்தியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சசிதேவ் 44 ரன்களும், முருகன் அஸ்வின் 28 ரன்களும், கவுசிக் காந்தி 22 ரன்களும் எடுத்தனர். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் அபினவ், கவுசிக் தல 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந் 4 ரன்னிலும், ஜெகதீசன் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த சுமந்த் ஜெயினும், மோகனும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சுமந்த் ஜெயின் 46 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக பெரியசாமி 5 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
Discussion about this post