உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் இருந்து எந்த ஒரு உடல் உறுப்புகளும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரரும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த ராமசாமி படையாச்சியார் உருவப்படம், சட்டப்பேரவையில் வருகிற 19 ஆம் தேதி திறந்து வைக்கப்படும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். முதலமைச்சர் உருவப்படத்தை திறந்து வைப்பார் என்று அவர் கூறினார்.
Discussion about this post