நியாய விலை கடைகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முழு காரணம் இத்துறைக்கான உயர் அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தமும், அவர்கள் கையூட்டுமே காரணம் என நியாய விலை கடை ஊழியர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரங்கிமலை பட்ரோடு JD 085 என்ற எண் கொண்ட நியாய விலை கடையில் விற்பனையாராக பணிபுரிபவர் ராஜன். இதே கடையில் உதவி விற்பனையாளர் மற்றும் எடையாளராக பணியாற்றுபவர் தனசேகர். இந்த கடையில் விற்பனையாளர் ராஜன், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், வெளிபொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்வது, மாதாந்திர பொருள் வாங்கா பயனாளிகளின் குடும்ப அட்டையை நகல் எடுத்துவைத்து அவர்களுக்கா பொருட்களையும் விற்பனையாளர் ராஜேனே கையாடல் செய்துகொள்வதாக வீடியோ ஆதாரங்களுடன் கடந்த புதன்கிழமை வெளிப்படுத்தினார். இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், முதல்கட்டமாக விற்பனையாளர் ராஜன், உதவி விற்பனையாளர் தனசேகர் மீது 2 மாதகாலம் பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்கசாலை நிறுவன மேலாண் இயக்குநர் தேவிப்பிரியா உத்தரவிட்டார். ஆனால் முறைகேடு செய்த விற்பனையாளர் ராஜனிடம் பணம் பெற்க்கொண்டு சரகமேலளர் குமார், பொது மேலாளர் சீனிவாசன், மேலாண் இயக்குனர் தேவிப்பிரிய உள்ளிட்டோர் முயற்சி செய்வதாகவும், மொத்தமாகவே பணியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் உதவி விற்பனையாளர் தனசேகர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, தனசேகர் என்ற உதவி விற்பனையாளர்இடம் கேட்டபோது, “பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவில், பணியிடைநீக்கத்துக்கான காரணம் குறிப்பிடவில்லை என்றும், இதற்கு மேல் என்மீதான காரணங்களை புதிதாக உருவாக்கி என்மீது பொய்யா நடவடிக்கை அதிகாரிகள் முயல்வதாக கூறினார். மேலும், நியாய விலை கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புகார் தன் ஊயிரக்கு உத்தரவாதம் இல்லை என்றும், தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவித்த அவர், சம்மந்தமே இல்லாமல் தனது மனைவிக்கு பொது மேலாளர் போன் செய்து, விசாரணை என்ற பெயரில் மிரட்டுவதாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை அளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
மேலும், “நியாய விலை கடைகளில் நடைபெறும் அத்துனை ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கு எங்கள் துறையில் உள்ள மேலாண் இயக்குநர்களும், பொது மேலாளர்களும் கொடுக்கும் அழுத்தமும், அவர்கள் கேட்க்கும் கையூட்டுக்காகவே நியாய விலை கடைகளில் பணியாற்றும் அத்துணை ஊழியர்களும் தொடர்ந்து பல் முறைகேடுகளை செய்துவருவதாகவும் அவர் பரப்பரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இத்துடன், இது குறித்து, மேலாண் இயக்குனர் தேவிப்பிரியாவிடம் விளக்கம்பெற முயற்சித்தபோது, பார்வையாளர் நேரத்தில் கூட சந்திக்கவோ, விளக்கமளிக்கவோ மறுத்துவிட்டார். இதனையடுத்து, தனசேகரின் மனைவியை விசாரணைக்கு வரச்சொல்லி செல்போனில் பேசிய பொதுமேலாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, மேலாண் இயக்குநர் உத்தரவின் பேரில் செல்போனில் தகவல் தெரித்ததாகவும், மேற்கொண்டு எந்த விளக்கம் வேண்டுமானாலும் தேவிப்பிரியாவிடம் கேட்டுக்கொள்ளவும் என்று முடித்துக்கொண்டார்.