ஊரகப்பகுதிகளில் 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலைகள் அமைக்க, 94 கோடியே 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊரகப்பகுதி மற்றும் குடியிருப்பு தெருக்களில் உள்ள பாதைகளை கண்டறிந்து கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் இணைப்பு இல்லாத கிராமங்களை இணைக்கும் வகையில், கழிவு நீர் செல்லும் வடிகால்கள் மற்றும் பாலங்கள் வசதியுடன் கூடிய தரமான கான்கீரிட் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 94 கோடியே 98 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Discussion about this post