தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 168 வழிபாட்டு தலங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு நிலங்களை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களை கட்டக் கூடாது என்ற அரசாணையை பின்பற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் 3 ஆயிரத்து 3 இந்து கோவில்கள், 131 தேவாலயங்கள், 27 மசூதிகள், 7 பிற மதத்தவரின் வழிபாட்டு தலங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Discussion about this post