தி.மு.க. ஆட்சிக் காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் 629 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் நடைபெற்ற 629 கோடி ரூபாய் முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் கூறினார். 629 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்பதால், நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட முடியாது என்று அவர் வாதிட்டார்.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஒத்திவைத்தார்.