கொரனா வார்டுகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் – கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட பணிக்கு தற்போது ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு
கடந்த ஆண்டு கொரனா பரவல் அதிகமாக இருந்த நிலையில் கொரனா சிறப்பு வார்டுகளில் உள்ள படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது
அதன்படி கொரானா சிறப்பு வார்டுகளில் உள்ள படுக்கைகள் அனைத்திலும் ஆக்ஸிஜன் பைப் லைன்கள், ஆக்ஸிஜன் வசதிகள் ஏற்படுத்தும் பணியை தமிழக அரசின் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொண்டது.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிக்காக தற்போது 135 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 65 கோடி ரூபாயும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 70 கோடி ரூபாயும் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது
Discussion about this post