அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் கிடைப்பது மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன் உருளைகள் தேவைகளை நிர்வகிப்பதற்காக, கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய நலவாழ்வு குழுமத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையமானது, தற்போதுள்ள 104 சுகாதார சேவை மையங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.
மேம்பட்ட செயல்திறன் மற்றும் மேம்பட்ட சுகாதார பணிகளுக்காக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம், மருத்துவமனைகள் நிறுவன சட்டம் மற்றும் பொது சுகாதார சட்டம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு ஒருங்கிணைந்த கட்டளை மையமான UCC செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் UCC மையமானது, படுக்கை மேலாண்மையை ஆன்லைன் மூலம் கண்காணித்து, தேவைப்படும் மக்களுக்கு உதவ உள்ளது.
சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை UCC கண்காணிக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது.
அதேபோல படுக்கை வசதிகளை அதிகரிப்பதிலும், ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வதிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு UCC உடனடி சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுக்கைகள் தேவைப்படுவோருக்கு ஆதரவாக ட்விட்டர் கணக்கு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பரவலாக கொண்டு சேர்ப்பதற்காக, #BedsForTN என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மைய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேசிய நலவாழ்வு குழுமத்தில் அமைக்கப்பட்டுள்ள UCC மையமானது, தற்போதுள்ள 104 சுகாதார சேவை மையங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம், மருத்துவமனைகள் நிறுவன சட்டம், பொது சுகாதார சட்டங்களுடன் தொடர்புகொண்டு UCC செயல்படும்
24 மணி நேரமும் செயல்படும் UCC மையமானது, படுக்கை மேலாண்மையை ஆன்லைன் மூலம் கண்காணித்து மக்களுக்கு உதவ உள்ளது
சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை UCC கண்காணிக்கும்
படுக்கை வசதிகளை அதிகரிக்க, ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு UCC உடனடி சேவைகளை வழங்கும்
படுக்கைகள் தேவைப்படுவோருக்கு ஆதரவாக @104GoTN என்ற ட்விட்டர் கணக்கு தொடக்கம்; சேவையை பரவலாக்க #BedsForTN ஹேஸ்டேக் உருவாக்கம்
பொதுமக்கள் கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை (UCC) பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள்