தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை – அம்பலமான உண்மை

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், ஐசியூ படுக்கைகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருவது சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

கடலூர், தருமபுரி, ராணிப்பேட்டை, சேலம், தேனி, திருவண்ணாமலை, திருப்பூர், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு ஐசியூ படுக்கை கூட காலியாக இல்லை என்பதை சுகாதாரத்துறை தெரியப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் ஒரே ஒரு ஐசியூ படுக்கை மட்டுமே காலியாக உள்ளதும் தெரியவந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஒரு ஆக்சிஜன் படுக்கை மற்றும் ஐசியூ படுக்கை கூட காலியாக இல்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 ஆக்சிஜன் படுக்கைகளும், ஒரு ஐசியூ படுக்கையும் மட்டுமே காலியாக உள்ளன. பாதிப்பு அதிகரித்து வரும் திருப்பூர் மாவட்டத்தில் ஐசியூ படுக்கைகள் இல்லாத நிலையில், 9 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே உள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளதால், ஏற்கனவே சிகிச்சை உள்ளவர்கள் வீடு திரும்பும் வரை, புதிதாக வருபவர்கள் மருத்துவமனை வளாகத்திலும், ஆம்புலன்ஸ்களிலும் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்வதாக புகார் எழுந்துள்ளது. படுக்கைகளுக்காக பல மணி நேரம் காத்திருப்பதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Exit mobile version