அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்து கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், சட்டம், ஒழுங்கு பராமரிப்புக்கு அதி முக்கியத்துவம் தரவேண்டும் என்றும், அரசின் மேம்பாட்டு திட்டங்களை கண்காணிக்கும் அதே வேளையில் மக்களின் கருத்தையும் அறிய வேண்டும் என்றும் கூறியுள்ளார். பலரிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்குகள் கூட இல்லாத நிலை உள்ளதாகவும், கிராமங்களுக்கு தொடர்ந்து சென்று மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குடிமராமத்து பணிகள் சரியாக நடக்கிறதா? என்பதை கண்காணித்துக்கொண்டிருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.. அடிமட்ட கிராமங்களின் மேம்பாடு மிக அவசியம் என வலியுறுத்தியுள்ள அவர், பால் உற்பத்தி, தானிய உற்பத்தி, துணிப்பை உற்பத்தி போன்றவற்றில் சுயஉதவிக்குழுக்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.
Discussion about this post