2020-21ம் நிதியாண்டில், நீதி நிர்வாகத்திற்காக ஆயிரத்து 403 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பிரத்யேகமாக விசாரிப்பதற்காக 16 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து 317 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் நீதிமன்றக் கட்டடங்கள், நீதிபதி குடியிருப்புகள் உட்பட பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதிய கட்டடங்கள் கட்ட 112 கோடியே 92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நீதி நிர்வாகத்திற்காக ஆயிரத்து 403 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post