ஏழை மாணவியின் குடும்ப சூழ்நிலையை அறிந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பசுமைவீடு, தங்கச்சங்கிலி மற்றும் ஸ்மார்ட் டிவி ஆகியவற்றை நேரடியாக வழங்கினார்.
திருவண்ணாமலை அடுத்த சு. நல்லூரைச் சேர்ந்த அண்ணாதுரை மற்றும் சுதா ஆகிய ஏழைக் கூலித்தொழிலாளி தம்பதியினருக்கு 2 மகன், 4 மகள்கள் என 6 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 3-வது மகளான நளாயினி, 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் ஆயிரத்து 330 குறள்களையும் ஒப்புவித்து, வென்று, ஆசிரியர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றதாகத் தெரிகிறது.
அப்போது மாணவி சிறிய குடிசை வீட்டில் வசிப்பதை அறிந்து, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி முதலமைச்சரின் பசுமை வீடு, திருவள்ளுவர் உருவம் பதித்த தங்கச்சங்கிலி மற்றும் ஸ்மார்ட் டிவி ஆகியவற்றை நேரடியாக வழங்கினார்.
Discussion about this post