திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் ஆகியோர் உள்நோயாளிகளிடம் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர். மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு , மற்றும் சிறுநீரக கோளாறு சீர்செய்யும் பிரிவு , ரத்தம் மறுசுழற்சி செய்யும் மையம் என மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ரத்தம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்றும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் தயாளனிடம் ஆட்சியர் மகேஸ்வரி கேட்டறிந்தார். சிகிச்சை குறித்து உள்நோயாளிகளிடம் கேட்டறிந்த அவர், போதிய அளவில் மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.
Discussion about this post