திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக் கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி அளவில் பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம், மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மூலவர் முருகப்பெருமான் வள்ளி தேவானை தாயாருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
தமிழகம் மட்டும் அல்லாது, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநில மக்களும் கலந்துக்கொண்டு, முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, திருத்தணி முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post